கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவிடம் இருந்த சிம்லா மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.
இமாசலப் பிரதேசத்தின் சிம்லா மாநகராட்சியில் உள்ள 34 வார்டுகளுக்கு தேர்தலில் கடந்த செவ்வாய் கிழமை நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், காங்கிரஸ் 24 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், மார்க்சிஸ்ட் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவிடம் இருந்த சிம்லா மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.